மதுரை,அக். 28-

தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில், நீண்ட காலத் தேடுதலுக்குப் பின் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். பாளையங்கோட்டை சிறையில் உள்ள அட்டாக் பாண்டியை, மதுரைச் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தயாளு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் வாதாட, அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, விசாரணை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: