பாட்னா:-

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தம்மை மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என பிரதமர் நரேந்திர மோடி கூறிவருவதற்கு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ்குமார், “நமது நாட்டில் ஒருவர் மதம் மாற முடியும்; ஆனால், சாதி மாற முடியாது; ஆனால், நமது பிரதமர் மோடியோ இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிக மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவுக்கு மாறி இருக்கிறார்” என்று நிதிஷ் கூறியுள்ளார். மேலும், பீகாரில் மிக மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு இருக்கிறதா?

என்று கேள்வி எழுப்பியுள்ள நிதிஷ், இதற்கு முன்னர் பிரதமர் மோடியை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு பிரதமராக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவித்திருந்தார். தற்போது மோடி அதில் இருந்து விலகி மிக மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் சேர்ந்துள்ளார் என்று கிண்டல் செய்துள்ளார்.இந்த நாட்டில், மோடியைப் போல வேறெந்த ஒரு பிரதமரும் சாதிய முத்திரை குறித்து இவ்வளவு பிரச்சனை ஆக்கியதில்லை என்றும் நிதிஷ் கூறியுள்ளார். (பிடிஐ)

 

Leave a Reply

You must be logged in to post a comment.