சென்னை, அக்.27-

புதிதாக கைது செய்யப்பட்ட 34 மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 46 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி, கடந்த 2 மாதங்களாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வீடு திரும்பும் முன், 26-ம் தேதி 2 படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரும் என 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: