பாட்னா:-

பீகார் சட்டப்பேரவைக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் அக்டோபர் 28 புதனன்று நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 49 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 32 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சரண், வைஷாலி, நாளந்தா, பாட்னா, போஜ்பூர் மற்றும் புக்சார் மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளுக்கு புதனன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் உள்ளிட்ட 808 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பாரதிய ஜனதா கூட்டணியைச் சேர்ந்த 34 வேட்பாளர்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 35 வேட்பாளர்களும் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் 18 பேரும் குறிப்பிடத்தக்கவர்கள். 808 வேட்பாளர்களில் 215 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: