அகமதாபாத் :-

படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்பதாக கூறிக் கொண்டு, மாறாக, இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான சதிவேலையில் இறங்கியிருப்பவர் ஹர்திக்படேல். இவர் தேசியக் கொடியை அவமதித்ததற்காகவும், போலீசாரை கொலை செய்யத் தூண்டியதற்காகவும், அகமதாபாத் மற்றும் சூரத் போலீசார் இவர் மீது 2 தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஹர்திக் படேலை, சனிக்கிழமையன்று அகமதாபாத் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் படேலை, 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால், 7 நாள் போலீஸ் காவலுக்கு மாஜிஸ்திரேட் எஸ்.ஜே.பிரம்மபட் அனுமதி வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: