மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு : ஜனவரியில் இருந்து ரத்து – பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி :-

மத்தியில் ஆட்சி அமைந்து பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஞாயிறன்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பான `மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.இதேபோல், மாநில அரசுகளிலும் இளநிலை பணியாளர்களுக்கான நேர் முகத் தேர்வு முறையை ரத்து செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: