கொல்கத்தா :-

பீகார் மாநிலத்தில் இரண்டுகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 28ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், நவம்பர் மாதம் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நான்காம் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நிதிஷ் குமாரையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, ஞாயிறன்று அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், `நாட்டின் தேவையையும், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் கருதி, இந்த தேர்தலில் நிதிஷ் குமாரை ஆதரித்து பீகார் மக்கள் வாக்களிக்க வேண்டும். அவரையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.