நியூயார்க்:-

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவி உட்பட 4 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவில் ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதற்காக நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கூடியிருந்தனர். அவர்களின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சாம்பர்ஸ் என்ற பெண் ஓட்டி வந்த வாகனம் மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேர் பலியாகினர். 40-க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் நிகிதா நகல் என்ற மாணவி மும்பையைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மத்திய ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

Leave A Reply

%d bloggers like this: