பெப்சி கம்பெனி ஒப்புதல்

பெப்சி கம்பெனி தயாரித்து விற்கும் அக்குவாபினா மினரல் வாட்டர் பாட்டிலில் இருப்பது வெறும் குழாய் நீர்தான், சுத்திகரிக்கப்பட்ட நீர் அல்ல என்று அந்த கம்பெனியே அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெப்சி கம்பெனி தயாரிக்கும் அக்குவாபினா மினரல் பாட்டிலின் லேபிள் மாற்றப்பட்டது. பெப்சியின் உற்பத்தி பொருள் என்று இருந்தது தற்போது பொது நீர் ஆதாரத்திலிருந்து என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர்கள் பெப்சி கம்பெனியின் மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேல் நாட்ரான் என்பவரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாட்ரான் கூறியதாவது:- சர்வதேசரீதியாக பொறுப்பேற்பதற்காக இவ்வாறு எங்களது உற்பத்தி பொருளின் மூலாதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சரியானதாக இருக்கிறது. மக்கள் தங்களது குளியலறைகளில் பெறும் நீருக்குத்தான் அவர்கள் சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவும்.

இவ்வாறு நாட்ரான் கூறியுள்ளார். இதே போல் அமெரிக்க நீர் பணிகள் சங்கமும் மக்கள் வாங்கும் தண்ணீர் சாதாரணமாக பொதுக் குழாய்களில் பெறப்படுவதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கிடையே அமெரிக்க நுகர்வோர் அமைப்பும் நீர் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பும் பெப்சி மற்றும் தனியார் குடிநீர் கம்பெனிகளை கடுமையாக கண்டனம் செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவை அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது. மக்கள் குளியலறைகளில் வரும் நீருக்காக 2,000 மடங்கு செலவழிக்கிறார்கள். இப்படி பொது வளமான நீரை விற்று கொள்ளையடிப்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மாபெரும் சுற்றுச்சூழல் மாசுப்பிரச்சனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. டெக்சாஸ் நகரத்தின் அளவை போன்று ஒரு பிரம்மாண்டமான மினரல் பாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன. இதன் அபாயத்தை இன்னொரு வகையில் கூற வேண்டுமானால் வரும் 2050-ல் இந்த பூமியில் உள்ள பறவைகள் ஒவ்வொன்றின் உடலிலும் உள்ள ஜீரண மண்டலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் துகள்கள் இருக்கும். இவ்வாறு அந்த அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: