திருநெல்வேலி,அக்.19-

தமிழக அரசின் சார்பில் 2015-16ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் அக்.17,18 ஆகிய தேதிகளில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வீரர், வீராங்கனைகள் மொத்தம் 2,768 பேர் கலந்து கொண்டனர். துவக்கவிழா நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர், மு.கருணாகரன் போட்டிகளை துவக்கி வைத்தார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி, பாளை. மண்டல சேர்மன் எம்.சி.ராஜன், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு விளையாட்டிற்கும் முதல் பரிசு ரூ.1000/-, இரண்டாம் பரிசு ரூ.750/-, மூன்றாம் பரிசு ரூ.500/- ரொக்கப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.முத்துகருப்பன் தலைமையுரையாற்றி ஆண்களுக்கான ரொக்கப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி.குழந்தைவேல், பெண்களுக்கான ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங் கினார். வழக்கறிஞர் ஹரிகர சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.பிராங்பால் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார்.

Leave A Reply