தூத்துக்குடி,அக்.19-

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு நூறு சதவீத பயர்க்காப்பீடு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு 100 சதவீதம் முழுமையாக வழங்க வேண்டும். விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டும்.

அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலிறுயுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோடங்கால் கிளைத் தலைவர் கந்தசாமி, இளவேலங்கால் தலைவர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் ராகவன், செயலாளர் கேபி பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் சுப்பையா, வட்டார தலைவர் மாரியப்பன், செயலாளர் துரைராஜ், ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply