தூத்துக்குடி,அக்.19-

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாதர் சங்கம் சார்பில் தெருவோர நாடாளுமன்ற இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பூமயில் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர், சு.விஜயலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் சு.குணேஷ்வரி, ஆ.கமலா, ஆ.தசலிஸ், புஷ்பராணி, ராமலட்சுமி, மங்கையற்கரசி, காளியம்மாள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் ஏழை,எளிய மக்களை தாக்குகின்ற கொள்கைகளான கேஸ் மானியம் ரத்து, உணவுப் பாதுகாப்பு, விண்ணை முட்டும் விலை உயர்வு, நலத்திட்டங்களுக்கு நிதி குறைப்பு 100 நாள் வேலைக்கான நிதி கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வீதி நாடகம் நடைபெற்றது.

Leave A Reply