தூத்துக்குடி,அக்.19-

தூத்துக்குடி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. தூத்துக்குடி அருகே உள்ள கைலாசபுரம் தட்டபாறை இடையே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வழியாக திங்களன்று காலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது ரயில் இன்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டதும், உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் மணியாச்சி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால், எவ்வித விபத்தும் ஏற்படவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.