நாகர்கோவில், அக்.19-

அனாதைகளுக்கு மட்டுமே முதியோர், விதவை ஓய்வூதியம் என அறிவித்த தமிழக அரசைக்கண்டித்து விதொச மாதர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதியோர் விதவை ஓய்வூதியம் அனாதைகளுக்கு மட்டும் எனக்குறிப்பிட்டு அரசாணை எண் 26ஐ வெளியிட்டு ஏற்கனவே வழங்கி வந்த ஓய்வூதியத்தை நிறுத்தம் செய்த தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து திங்களன்று காலை 11 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத்தலைவர் ஆர்.லீமாறோஸ் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி ஆகியோர் தலைமை தாங்கினர். விதொச மாநில பொதுச்செயலாளர் ஜி.மணி துவக்கவுரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.முருகேசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் உஷா பாசி, மாவட்ட பொருளாளர் எஸ்தர் ராணி, மாவட்ட துணைத் தலைவர் லலிதா கார்த்திகேயன், விதொச மாவட்ட பொருளாளர் சிவானந்தம் மாவட்ட துணைத் தலைவர் ஷாகுல் ஹமீது டீ.பேபி ஆகியோர் உரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.