ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துக!

நாகர்கோவில்,அக்.19-

இராஜாக்கமங்கலம் துறை ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த் தக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இராஜாக்கமங்கலம் ஒன்றிய 17 வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாடு ஞாயிறன்று இராஜாக்கமங்கலத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் எம்.விஜயராகவன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் கே.சரவணன் கொடியேற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் பி.சி. சுரேஷ்குமார் துவக்கவுரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர் அபுசாலி வேலையறிக்கையும், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜேஸ் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எம்.பிந்து, இந்தியமாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விஜய், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் 12 உறுப்பினர்கள் கொண்ட புதிய வட்டாரக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய வட்டாரத் தலைவராக எம்.மணிகண்டன், செயலாளராக எம்.விஜயராகவன், பொருளாளராக ஜி.சிவ சுப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் என்.ரெஜீஸ்குமார் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், இராஜாக்க மங்கலத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் இராஜாக்கமங்கலம் துறையில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரியும் ஈத்தாமொழியில் உள்ள கயிறு ஆலையை மேம்படுத்தக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: