“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்கிற பழமொழியை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண் குழந்தை தென்ஆப்பிரிக்காவில் நிரூபித்துக் காட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்ஸ்பார்க். இந்த நகரத்தில் இளம் கராத்தே மற்றும் கிக்பாக்சிங் சாம்பியன் பட்டத்திற்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கியாரா என்ற பெண் குழந்தை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த குழந்தைக்கு வயது மூன்றுதான்.கியாராவின் தந்தை அகமது ஷா தென் ஆப்பிரிக்காவில் கராத்தே பயிற்சியாளர். தனது தந்தை கற்றுக் கொடுத்த கராத்தே பயிற்சியை தினமும் கியாராவும் கவனித்து வந்துள்ளார். தனது மகளின் ஆர்வத்தை கண்டறிந்த தாய் லைலா, 16 மாதத்தில் கராத்தே பயிற்சியில் சேர்த்துள்ளார்.மழலைப் பருவத்தில் தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் கராத்தே சண்டையிட்டார். கராத்தே கலை நுட்பங்களையும் மிக எளிதில் புரிந்துகொண்டார். குழந்தையாக இருந்தாலும் கலைமீது அதிகம் ஈடுபாடுகாட்டினார். கருப்பு பெல்ட் வாங்கியுள்ள குழந்தை கியாரா, இரண்டாவது வயதிலேயே கராத்தே போட்டிக்கு தயாராகிவிட்டார்.

அந்த அளவுக்கு வேகமாக பயிற்சி பெற்று “தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.இப்போதுதான் குழந்தை கியாராவுக்கு மூன்று வயது நிறைவடைந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் அவளது வயதிற்கேற்ற போடியாளர்கள் இல்லை என்றாலும் போட்டியில் பங்கேற்க விரும்பினார். 5 வயது பேட்டியாளர்களுடன் சண்டையிட அமைப்பாளர்கள் அனுமதித்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பார்க் நகரில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர்.

அவர்கள் முன்னிலையில் குழந்தை கியாரா செய்து காட்டிய கராத்தே கலை அனைவரையும் பிரமிக்க வைத்தது. அத்தோடு நிற்கவில்லை. சண்டையிட்டு அசத்தலாக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கராத்தே “இளம் வீரர் சாம்பியன்” பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியை நேரில் பார்த்த அக் குழந்தையின் பயிற்சியாளரும் தந்தையுமான அகமதுஷா, தாய் லைலா ஆகியோர் கூறுகையில், இந்த வெற்றி குழந்தை கியாராவின் பிறந்த நாள் பரிசு என்றும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றும் கூறினர்.கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருந்தே கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று துடியாய்த் துடித்ததையும் நினைவுபடுத்தினர். சர்வதேச அளவில் வெற்றி பெற்று முத்திரை பதிக்க வேண்டும் என்பதே தனது மகளின் அடுத்த இலக்கு என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: