புதுதில்லி,அக்.17-

எலும்புருக்கி நோய், தொடர் ரத்தப்போக்கு உள்ளிட்ட கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் `டெபோ புரோவெரா’ மற்றும் `நெட்-என்‘ போன்ற கருத்தடை சாதன ஊசிகளை குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தில் பயன்படுத்திட அனுமதி அளித்தற்கு கடும் கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகள், பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலந்தொட்டே, பெண்களைக் குறி வைத்துத்தான் அனைத்து மக்கள் தொகைக் கட்டுப்பாடு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட ஆணாதிக்க மனப்பான்மையுடன் குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களையும் மருந்துகளையும் ஊசிகளையும் பரிசோதித்துப் பார்க்க பெண்களின் உடல்களை பரிசோதனைக்களமாக பயன்படுத்துவதையும் எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் போராடி வந்துள்ளன. பெண்கள் மீது திணிக்கப்படும் குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் அவர்களின் உடல்களிலும் மனங்களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை எத்தனையோ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இருப்பினும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளும் கார்ப்பரேட்டுகளும் பெண்களின் உடலைக் குறிவைத்து குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங்களையும் மருந்துகளையும் மற்றும் ஊசிகளையும் தயாரித்து அவற்றை மூன்றாம் உலக நாடுகளில் விற்பனை செய்து வருகின்றன. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும் அரசின் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த மருந்துகளிலும் சாதனங்களிலும் நார் பிளாண்ட் போன்ற சாதனங்கள் கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை என்றாலும் அவை சர்வசாதாரணமான முறையில் இந்திய மருந்துச் சந்தையில் புழக்கத்தில் உள்ளன.இவற்றில் டெபோ புரோவெரா மற்றும் (னுநயீடி ஆநனசடிஒல ஞசடிபநளவநசடிநே ஹஉநவயவந-னுஆஞஹ) நெட்-என் என்ற இரு மருந்துகள் சமீபத்தில் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் சேர்க்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் ,மருத்துவர்கள் ஆகியோர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

எலும்பை உருக்கும் கொடிய நச்சு

கடந்த 1986ல் பெண்கள் அமைப்புக்கள், டெபோ புரோவெரா மற்றும் நெட் -என் போன்ற கருத்தடை ஊசிகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன என்று வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்வகை கருத்தடை ஊசிகளின் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க உத்தரவிட்டது. ஆனால் அந்த கருத்தடை ஊசிகளை பயன்படுத்திட தடை செய்யவில்லை. இவை தனியார் மருத்துவமனைகளில் கிடைத்து வந்த நிலையில் இது போன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்கும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உயர் மட்ட அமைப்பான மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (னுசரபள கூநஉhniஉயட ஹனஎளைடிசல க்ஷடியசன–னுகூஹக்ஷ) கடந்த 1995ல் டெபோ ஊசி மருந்தானது தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் சேர்த்து கொள்ளப்பட மாட்டாது என்று பரிந்துரைத்தது. இந்த முடிவை கடந்த 2015 பிப்ரவரியிலும் உறுதி செய்தது.மேற்படி வாரியமானது தனது பரிந்துரையில், டெபோ -புரோவெரா மருந்து எலும்புகளை உருக்கி விடும்; இந்த ஊசி உடலில் செலுத்தப்பட்டால் அதன் நச்சானது உடலில் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்பதாலும், இவற்றின் பாதிப்பை சரி செய்யவே முடியாது என்பதாலும் தடை செய்யப்படுகிறது என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது அதே வாரியம் ஊசியை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

அனுமதித்தது ஏன்?

டெபோ புரோவெரா மருந்தின் பாதுகாப்பு பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும்போதே அது அனுமதிக்கப்பட்டிருப்பது ஏன்? டெபோ புரோவெரா மருத்துவரீதியாக சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இதன் பக்க விளைவுகளில் முக்கியமானவை நீண்ட கால மற்றும் முறையற்ற இரத்தப்போக்கு , எதிர்ப்பு சக்தி குறைதல்,இளம் பெண்களில் எலும்புச் சத்து இழப்பு, எடை கூடுதல், மன அழுத்தம் மற்றும் சக்தி குறைவுபோன்றவை ஏற்படும் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.

50 லட்சம் குழந்தைகளின் உயிர் பறிப்பு

இன்னொரு பக்க விளைவாக டெபோ புரோவெரா ஊசி செலுத்தப்பட்ட அன்னையர் தாய்ப் பாலூட்டும் பட்சத்தில் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அதனால் உலகம் முழுவதும் 50 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழந்து வருகின்றன என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் அபாயம்

கடந்த 10 ஆண்டுகளாக டெபோ புரோவெரா பயன்படுத்திய பெண்களுக்கும் அவர்களின் மூலமாகஅவர்களின் கணவர்களுக்கு எச்ஐவி தொற்று இருப்பது பல மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருத்தடை சாதனங்கள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொற்று நோய்கள் குறித்த நிபுணர்கள் டெபோ புரோவெராவை தொடர்ந்து மக்கள் மத்தியில் குறிப்பாக எச்ஐவிஅதிகமாக உள்ள மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு இவ்வாராய்ச்சியாளர்கள் டெபோ புரோவெரா குறித்து ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த புகார் மனுவில் டெபோ புரோவெராவை பயன்படுத்தினால் எச்ஐவி தொற்றுக்கான அபாயம் உள்ளதுஎன்றும் எனவே இத்துடன் சேர்த்து எச்ஐவி தடுப்பு மருந்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றஎச்சரிக்கையை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்ருந்தனர். சப்சஹாரன் ஆப்பிரிக்கா என்பது உலகிலேயே அதிகமாக எச்ஐவி தொற்றுடன் 1 கோடியே 60 லட்சம் பெண்கள் வாழும் பகுதியாகும். இருப்பினும், டெபோ புரோவெரா அங்கு தாராளமாக கிடைக்கிறது; அங்கு மட்டுமின்றி ஆசியாவின் சந்தைகளிலும் தாராளமான புழக்கத்தில் விடப்பட்டது.பெண்கள் அமைப்புகளும் சுகாதார அமைப்புகளும் இது போன்ற கருத்தடை ஊசிகளையும் சாதனங்களையும் கடந்த பல ஆண்டுகளாகவே எதிர்த்து வருகின்றன. டெபோ புரோவெராவின் பாதக விளைவுகள் குறித்தும் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் நாங்கள் ஏற்கனவே எங்களது கவலைகளை கூறியுள்ளோம். சிறப்பாக பணி புரியும் ஒரு சுகாதார அமைப்பிலேயே டெபோ புரோவெராவை பயன்படுத்தினால் அதனைத் தொடர்ச்சியாக சுகாதார பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், எந்தவித ஒரு நல்ல சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத நிலையில் பெண்களுக்கு எந்தவிதமான போதுமான தகவலும் அளிக்காமல் கருத்தடை சாதனமானது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது.

பாதுகாப்பான கருத்தடை இல்லை

தற்போது சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது; அதே சமயத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான சம்பளமும் மருந்துகளின் விலையும் அதிகமாகியுள்ளது. மனித வளக் குறைபாடும் தீவிரமாகியுள்ளது. மகப்பேறு மருத்துவர்களும் குறைவாக உள்ளது கடுமையாக உணரப்படுகிறது. எனவே பாதுகாப்பான கருத்தடைகளுக்கு தீவிரமாக ஆதரவு அளிக்கின்ற சுகாதார அமைப்பு தற்போது இல்லை. சில அரசு சாரா அமைப்புகளும் மற்றும் சில சர்வதேச அமைப்புகளும் ஏழைப் பெண்கள் தங்களது உடலின் மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்கவும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும் டெபோ புரோவெரா உதவுகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றன. ஆனால் பெண்களின் உடலின் மீது இத்தகைய கருத்தடை சாதனங்கள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் குறித்து அவர்கள் அக்கறை கொள்வதில்லை. மேலும் அத்தகைய கருத்தடை சாதனங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கு நமது மருத்துவக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதையும் அவர்கள் உணருவதில்லை.கருத்தரிப்பதையும் குழந்தை பிறப்பதையும் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது என்ற நிலையில் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கும்போது அவற்றின் பாதுகாப்பு முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.மேற்படி அக்கறைகளை கொண்டு நாங்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம்;ட தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் டெபோ புரோவெராவை அறிமுகப்படுத்தும் முடிவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும். கருத்தடை ஊசிகள் குறித்து அக்கறைகளை எழுப்பி வரும் பெண்கள் மற்றும் சுகாதார செயல்பாட்டாளர்கள் கொண்ட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்.ட உடலில் ஊடுருவி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத, பெண்களுக்கான பாதுகாப்பான கருத்தடைகள் குறித்து ஆராய வேண்டும்.ட ஆண்களுக்கான ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்த வேண்டும். பொதுவாக குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்கு மிக முதன்மைபட்ச முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழில் : சேது

Leave A Reply

%d bloggers like this: