வேலூர்,அக்.16-

பேரணாம்பட்டு அருகே வேன்- பைக் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-பேரணாம்பட்டு அருகே உள்ள கொந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரணபாஸ். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (22). நண்பர்களான இருவரும், வியாழனன்று (அக். 15) இரவு 8 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பேரணாம்பட்டில் இருந்து குடியாத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மொரசப்பள்ளி கிராமத்துக்கு அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே பேரணாம்பட்டை நோக்கி சென்ற வேனும், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். கலையரசன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்ததாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.