நாகர்கோவில், அக்.15-

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் முன்னணி ஊழியர் பயிற்சி முகாம் பார்வதிபுரத்தில் நடைபெற்றது. அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் தோவாளை, அகஸ் தீஸ்வரம் வட்ட முன்னணி ஊழியர்களின் பயிற்சி வகுப்பு பார்வதிபுரம் தோழர்.பி.திவாகரன் நினைவு அரங்கில் நடை பெற்றது. வகுப்புக்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நாகர்கோவில் வட்டாரச்செய லாளர் கருணாகரன் வர வேற்றார். தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் வாழ்த்துரை வழங்கினார். மூத்தஉறுப்பினர் ஏ.எஸ்.கிருஷ் ணன்குட்டி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி நிறைவுரையாற் றினார். ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தலைவர் அருணாச்சலம் நன்றி கூறினார்

Leave a Reply

You must be logged in to post a comment.