நாகர்கோவில்,அக்16-

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது மாவட்ட மாநாட்டு இலச்சினை(லொகோ) கருங்கலில் வெளியிடப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது மாவட்ட மாநாடு வரும் டிசம்பர் 11, 12, 13 தேதிகளில் கருங்கலில் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை திட்ட மிடும் வகையில் மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் கருங்கலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வரவேற்புக்குழு தலைவர் சோபனராஜ் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு செயலாளர் எபிலைசியஸ் ஜோயல் மாநாட்டுப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆர்.செல்லசுவாமி மாநாட்டு லச்சினையை வெளியிட்டு உரையாற்றினார். இதனையடுத்து மாவட்ட மாநாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னாள் மாவட்டத்தலைவர் சாந்தகுமார் உரையாற் றினார். வட்டாரத்தலைவர் றசல்ராஜ், ஜோஸ், ஜவகர், வரவேற்புக்குழு பொருளாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply