தூத்துக்குடி, அக்16-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

1.1.2016 தேதியை தகுதி நாளாகக் கொண்டு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் (2016) நடைபெற்று வருகிறது. 1.1.2016 ல் 18 வயது நிறைவடைந்தவர்கள் 1.1.1998-க்கு முன் பிறந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச் சாவடி மையத்தில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலு வலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கலாம்.இம்மாதம் 24ஆம் தேதிவரை மனுக்களைப் பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. எனவே அக்டோபர் 24 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு மனுக்கள் பெறப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.