புதுதில்லி, அக்.16-

மக்களை கொடூர வன்முறைகளின் மூலம் கொலை செய்யும் மதவாத கும்பல்களை பயங்கரவாதிகள் என்றே அழைக்க வேண்டும் என இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பேராசிரியர் ரொமிலா தாப்பர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் என்டிடிவிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் ரொமிலா தாப்பர் கூறியதாவது:-

மதவாத கும்பல்கள் ஆங்காங்கே படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். சிலரின் முகத்தில் கருப்பு மையை பூசுகின்றனர். இவர்கள் தனித்தனியான சக்திகள் அல்ல. இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலான அரசியல் கட்சியை பின்பற்றுபவர்கள். இது போன்ற சில நபர்கள் அரசின் துணையோடு இத்தகைய செயல்களை செய்வதை நாம் அனுமதிக்கப் போகிறோமா?

இது போன்ற கருத்தியல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களை கண்டித்து அறிவாளிகள் குரல் எழுப்ப வேண்டும். எழுத்தாளர்கள் தங்களது விருதுகளை திரும்பித் தருவது அரசுக்கு எதிரான கண்டன அறிக்கைகள் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply