பாட்னா, அக். 16–

பீகார் மாநில சட்டப்பேரவைக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், முதற்கட்டமாக கடந்த 12-ஆம் தேதி 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 57 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று 6 மாவட்டங்களில் உள்ள 32 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.

இந்த 32 தொகுதிகளும் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகள் என்பதால், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், 11 தொகுதிகளில் பிற்பகல் 3 மணியுடனும், 12 தொகுதிகளில் மாலை 4 மணியுடனும் வாக்குப்பதிவு முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: