கோவில்பட்டி, அக். 16 – கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள பாரதி இல்லத்தில் பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பால்விலை லிட்டர் 1க்கு ரூபாய்.35 வழங்கக்கோரியும் மாட்டு தீவனம், புண்ணாக்கு ஆகியவற்றை மானிய விலையில் தரமான பொருளாக வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டிற்கு தீத்தாம்பட்டி சிவன்ராஜ் தலைமை வகித்தார். வி.ச. மாவட்டச் செயலாளர் கே.பி.பெருமாள் பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர், மாவட்டத் தலைவர் ராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பால் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பையா, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மகாலிங்கம், பாலமுருகன், நடராஜன், தங்கவேல் ஆகியோர் இம்மாநாட் டில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.