கடலூர், அக்.16-

கடலூரில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 30 மாணவிகள் வாந்தி, மயக்கத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கடலூர் கடற்கரைசாலையில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரிகளில் படித்து வரும் சுமார் 100 மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை இரவில் மாணவிகளுக்கான இரவு உணவு பரிமாறப்பட்டது. உணவைச் சாப்பிட்ட மாணவிகள் ஒருவருக்குப் பின் ஒருவராக மயக்கமடைந்தனர். சிலருக்கு வாந்தியும் வந்தது.இதனையடுத்து, உணவை பரிசோதித்த போது உணவில் பல்லி விழுந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மாணவிகள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விடுதியில் சமைக்கப்பட்ட உணவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மாதிரி எடுத்து ஆய்விற்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: