மதுரை, அக்.16-

மதுரையில் பாதாளச் சாக்கடை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டி ருந்த இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது தொடர்பாக, ஒப்பந்த தாரர் ஜேசுதாசிடம் விசார ணை நடத்திவருவதாகவும், அவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் இரு வேறு தகவல்கள் தெரிவிக் கின்றன. மதுரை மாநகராட்சி யில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் புதூர் மஞ்சள் மேடைச் சேர்ந்த முனி யாண்டி (29) மற்றும் திரு வண்ணாமலை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (20)ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் புதன் கிழமை கோச்சடை எச்.எம்.எஸ். காலனியில் பாதாளச் சாக்கடை அடைப்பை சீர் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.பாதாளச் சாக்கடைஅடைப்பை இயந்திரம்மூலமே சீர்செய்யவேண் டும் என்ற விதியை மீறி மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டதாலேயே இரண்டு பேர் உயிரிழந்த னர் எனக்கூறி சுகாதாரப் பணியாளர்கள் இறந்த வர்களின் உடல்களை எடுக்கவிடாமல் போராட் டம் நடத்தினர்.

மாநகராட்சி ஆணையர் சி. கதிரவன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகே உடல்களை உடற்கூராய்வு செய்ய அனுமதித்தனர். அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு வியாழக் கிழமை முடிந்த நிலை யில், உடல்களைப் பெறஉறவினர்கள் மறுத்து விட்டனர்.சம்பவத்திற்கு காரண மான ஒப்பந்ததாரரையும், மாநகராட்சி அதிகாரி களையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஒப்பந்ததாரர் தாஸ் என்பவர் கைது செய்யப் பட்டு விட்டதாகவும், இல்லை அவரிடம் விசாரணைமட்டுமே நடத்திவருவதாக வும் காவல்துறை வட்டாரத்தில் இரு வேறுதகவல்கள் தெரிவிக்கப் பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்கு

தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத் தில், பலியான முனி யாண்டியின் மனைவி மகாலட்சுமி மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாநக ராட்சிப் பொறியாளர் மது ரம், உதவிப் பொறியாளர் மயிலேறிநாதன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் அதனடிப் படையில் அஜாக்கிரதை யாக செயல்பட்ட பிரிவில்வழக்குப் பதிவு செய்துள்ள தாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

Leave A Reply

%d bloggers like this: