சென்னை, அக். 16-

தமிழகத்தில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பட்டாசு கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக பட்டாசு விற்பனையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு வெள்ளியன்று (அக். 16) சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, சீன பட்டாசு விற்பனையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படையில் இடம் பெறுவோர் தொடர்பான விபரங்களை அக்டோபர் 26-ம் தேதிக்குள் அரசு தெரியப்படுத்த வேண்டும் என்றும், உத்தரவை மீறி விற்பனை செய்யப்படும் சீனப் பட்டாசுகளை காவல்துறை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: