திருநெல்வேலி, அக். 6 –

        விடுபட்ட 186 பேர்களுக்கு குடிமனை பட்டா கேட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சுமார் 400 க்கும் அதிகமானோர் குடிமனை பட்டா கேட்டு கடந்த 4 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் விளைவாக கடந்த சில மாதங்களுக்கு முன் 173 பேருக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது எஞ்சிய 173 பேருக்கு விரைவில் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை கூறியது. அம்பைசிவந்தி புறத்தில் 14 ஏக்கர் அரசு தரிசுநிலங்கள் இருப்பதால் அந்த நிலத்தை வழங்குமாறு பொதுமக்கள், சிபிஎம் வலியுறுத்தியது. ஆனால் பல மாதங்களாகியும் தகுதியான மேற்படி நபர்களுக்கு பட்டா வழங்கபடவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பைவட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து புதனன்று அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ராபேக்கால் தலைமையில் பட்டா கிடைக்காத மக்கள் ஒன்று கூடி வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவம் கேள்விப்பட்ட வட்டாட்சியர் பால்துரை, டி.எஸ்.பி சிவநேசன், இன்ஸ்பெக்டர் சயிபுல்லா மற்றும் வருவாய் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிபிஎம் அம்பை ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகம், அம்பை ஒன்றியக் குழு உறுப் பினர்கள் ஜெகதீசன், சுடலைமணி, சங்கரன்மணி, இசக்கி ராஜன் மற்றும் கட்சி தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் நவம்பர் மாதத்திற்குள் விடுபட்ட 173 பேர்களுக்கு பட்டா வழங்கபடும் என்று வட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக கொடுத்ததால் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: