எழுத்தாளர்களின் அடிப் படை சுதந்திரம் பற்றிய விஷயத்தில் மௌனம் காத்து வரும் சாகித்ய அகாடமியிடமிருந்து விலகி நிற்க எழுத்தாளர்கள் பல ரும் மேற்கொள்ளும் நிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது குறித்து, மத்திய செயற்குழுவின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது: சாகித்ய அகாடமி மேற் கொண்டுள்ள நிலையிலிருந்து, விலகி நிற்க நேர்மையும் ஜன நாயகத்தின் மீது ஈடுபாடும் கொண்ட எழுத்தாளர்கள் நாடு முழுவதும் எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் கொலை கொலை செய்யப்பட்டது குறித்து சாகித்ய அகாடமி, வெட்கங்கெட்ட முறையில் மௌனம் காப்பது குறித்து நயன்தாரா ஷேகல், அசோக் வாஜ்பேயி, சச்சிதானந்தன் தொடங்கி எழுத்தாளர்கள் பலரும், பகிரங்கமாக வினாக்களை எழுப்பியுள்ளனர்.

வாழ்வதற்கும், சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் உள்ள எழுத்தாளர்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு பழமைவாத சக்திகள் சவால் விடும்போது, எழுத்தாளர்களின் சுதந்திரம்காக்க தனது பங்கை, சாகித்ய அகாடமி ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் செயல்படவிடாமல், பாசிச சக்திகள் முயற்சி மேற்கொள்ளும் போது சாகித்ய அகாடமி தனது கண்களை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. இந்திய, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றின் புகழ்மிக்க அமைப்பான சாகித்ய அகாடமி, சங் பரிவாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆளும் வட்டாரங்களின் அருவருக்கத்தக்க விருப்பங்களுக்கு இசைவாக நடந்து கொள்ளும் வகையில் தன்னை தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும், இந்திய அறிவுத் துறையினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதோடு நிலைமை மேலும் மோசமடையாமலிருக்க உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.நமது மகத்தான நாட்டின் அடிப்படையான சிறப்புப் பண்புகளைப் பாதுகாக்க முன்வருமாறு நாட்டின் சீரிய சிந்தனையுள்ள, மதச்சார் பற்ற, முற்போக்கு எழுத்தாளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. சுதந்திர இந்தியாவின் சமூக, கலாச்சார, அரசியல் பன்மைத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாத்திட அவர்களின் முயற்சிகள், அனைத்திற்கும் தனது ஆதரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.