தூத்துக்குடி :-

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனியன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பூங்கொடி அருமைக்கண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வல்ல நாடு தலைமை நீரேற்று நிலையம் பகுதிக்குச் செல்லும் மின்பாதையான பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அன்றைய தினம் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் பம்பிங் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். எனவே, மாநகர பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.