திருநெல்வேலி, அக். 16-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் ஆவுடையனூரில் சிஐடியு பீடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பீடி தொழிலாளர்கள பீடி சுற்ற தரமான இலை 700 கிராம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வான ரூ.12 ஐ பீடி தொழிலாளர்களுக்கு பீடி கம்பெனிகள் வழங்க வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் போக்கை பீடி கம்பெனிகள் கைவிட வேண்டும், சாரல் புத்தகம், சட்டை துணி வாங்க பீடி தொழிலாளர்களை கம்பெனிகள் கட்டாயப்படுத்த கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பீடி சங்க ஒன்றிய செயலாளர் ஆரியமுல்லை தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் சாந்தி, தேனம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் ம.ராஜாங்கம் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்துப் பேசினார். சி.பி.எம் ஒன்றிய செய லாளர் முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர் அப்பாதுரை, கிளை செயலாளர் அந் தோணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பீடிதொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு பீடி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எம்.வேல் முருகன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வள்ளியம்மாள், பிச்சைகனி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.