திருநெல்வேலி,செப்.30-

திருநெல்வேலி மாவட்ட ஆக்கி சங்கம் இந்திய தேசிய விளையாட்டான ஆக்கியை மேம்படுத்தும் வகையில் கங்கைகொண்டான் நோவா கார்பன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாருடன் இணைந்து 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பங்குபெறும் மாபெரும் ஜூனியர் ஆண்கள் ஆக்கி லீக் போட்டியை அக்டோபர் மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு அகாடமி உட்பட சுமார் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன. துவக்கப் போட்டியானது 1-ந் தேதி காலை 6.30 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 3.10.2015 மாலை 5 மணியளவில் நிறைவுபெறும். இந்த போட்டிகளின் போது திருநெல்வேலி மாவட்ட ஜுனியர் அணிக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டி தொடர்பான விபரங் களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் திருநெல்வேலி மாவட்ட ஆக்கி சங்க இணை செயலாளர் ரவிகுமாரை (9842057635) தொடர்பு கொள்ளவும். மேற்படி தகவல்களை திருநெல்வேலி ஆக்கி கழக மாவட்ட செயலாளர் ராஜசேகர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.