பெரும்பாவூர்: திருச்சூர் மாவட் டம், இரிஞாலக்குடா சேகூர் பகுதியைச் சேர்ந்தவர் போல்சன்( 42). இவருடைய மகன் ஆதித்(12). 7-ம் வகுப்பு மாணவர். கடந்த சுதந்திர தினத்தன்று போல்சன், தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும்கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு மூளைச்சாவு அடைந்த ஆதித் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவ ருடைய தாயார் அனுமதி அளித்தார். இதையடுத்து மாணவர் ஆதித் தின் இதயம் கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருக்கு பொருத்தப்பட்டது. அதுபோல் நுரையீரல், சிறுநீரகங்களும் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: