பென்னாகரம், ஆக. 18-

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளிலும், கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணையில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 13ம் தேதி வினாடிக்கு 2000 கனஅடியளவில் மட்டுமே இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து செவ்வாயன்று (ஆக. 18) 13,400 கன அடியை எட்டியது. இதே போல் மேட்டூர் அணைக்கு திங்களன்று (ஆக. 17) வினாடிக்கு 10,141 கனஅடியாக இருந்த நீர்வரத்து செவ்வாயன்று வினாடிக்கு 10,545 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகளவில் உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 91.40 அடியாக இருந்த நீர்மட்டம் செவ்வாயன்று 91.20 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 54.03 டிஎம்சி.

Leave A Reply

%d bloggers like this: