சென்னை, ஆக. 18-

என்.எல்.சி. தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு பிரதமர் தீர்வு காண வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். நெய்வேலி என்எல்சி தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி கடந்த மாதம் 20ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா செவ்வாயன்று (ஆக. 18) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக என்.எல்.சி. தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் தொடர்பாக நான் ஏற்கனவே தங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். தொழிலாளர்களின் குறைகளை உடனே கேட்டறிந்து பிரச்சனையை தீர்க்க நிலக்கரித்துறைக்கு அறிவுறுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனினும், நிலக்கரித் துறையால் தீர்வு காணப்படாததால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது தொழிலாளர்கள் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த போராட்டம் நீடித்தால், தமிழ்நாட்டிற்கு மின்விநியோகம் பாதிக்கப்படும். எனவே, தொழிலார்களின் பிரச்சனையை உடனடியாக சுமுகமாக தீர்க்கும்படி நிலக்கரித் துறைக்கு தாங்கள் உத்தரவிடவேண்டும். இதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் மின்விநியோக நிலவரம் பாதிக்கப்படும்” என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: