சென்னை, ஆக. 3-

அரசுத் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளராக என்.பூங்குழலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். திங்களன்று (ஆக.3)வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வட்டத்தில் தலைமை பொது மேலாளராக நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி பூங்குழலி ஆவார்.

இந்திய தொலை தொடர்பு சேவையின் 1979-ம் ஆண்டு அணியை சேர்ந்த என்.பூங்குழலி சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவி ஆவார். 34 ஆண்டுகளாக தொலைத் தொடர்புத்துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

தொலைத் தொடர்புத் துறையில் தனது செயல்திறனை மேம்படுத்துவதற்காக கொரியா மற்றும் மலேசியாவில் சுவிட்சிங் தொழில்நுட்பம் தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்று பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: