திருவள்ளூர், ஆக. 3-

திருவள்ளூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியில் சுமார் 20 திருநங்கைகள் வசிக்கின்றனர். திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் எங்களிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. ஆனாலும் யாரும் எங்களுக்கு வேலை கொடுக்க முன் வருவதில்லை.

எனவே எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் ரேஷன் கார்டு, வாக்காளர் அயாள அட்டையை திருப்பி கொடுத்துவிடுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அரசுதான் பரிசீலனை செய்ய முடியும். உங்களுக்கு மிக எளிய முறையில் வங்கிக்கடன் உதவி வழங்க முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார்.

Leave A Reply