விழுப்புரம், ஆக. 2-

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் இம்மாதம் 10-ம் தேதி காலை 10 மணிமுதல் 72 மணி நேர தொடர்உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நடத்துகிறார்கள்.

கடந்த 7.5.2013 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை முழுமையாக அமல்படுத்த வேண்டும், நிபந்தனை அடிப்படையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராகப் பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வரும் பணியில் இளையோர் 186 பேரை பதவி இறக்கம் செய்து, அப்பணியிடங்களை பணியில் மூத்தோரைக் கொண்டு நிரப்பிட வேண்டும். பி.எ, எச்.இ, என்.எம்.எஸ், இ.எஆகிய பதவி உயர்வு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிஎம்எஸ் அலுவலகம் முன்பு 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று நடத்துவது என விழுப்புரத்தில் நடந்த பொது சுகாதாரத் துறைஅலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: