சென்னை, ஆக.2-

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து குளம் போல தேங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது.

Leave A Reply