அம்பத்தூர், ஆக. 2-

அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் மூர்த்தி நகர் புற்று கோயில் தெருவில் வசித்தவர் முனியன் (65). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் சனிக்கிழமை மாலை அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த லாரி ஒன்று பின்நோக்கி வந்து, அங்கு நின்று கொண்டிருந்த முனியன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு முனியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் அடுத்த அனகாபுத்தூர் பவானி தெருவில் லாரி ஓட்டுநர் ரமேஷை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply