வேலூர், ஆக. 2 –

வேலூர் மலைக் கோடி நாராயணி பீடம் சார்பில் வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ் 800 மாணவர்களுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டு முதல் வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ் கிராமபுற ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை கோட்டு விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்கள் நாராயணி பீடம் சார்பில் பரிசீலிக்கப்பட்டு, இந்தஆண்டு 800 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பிற்கான உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த உதவித் தொகை வழங்கும் விழா நாராயணி பீடத்தில் ஞாயிறன்று (ஆக. 2)ந்தேதி பீடாதிபதி சக்தி அம்மா தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஸ்ரீபாத்யசோநாயர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கிரண்குமார், நாஞ்சில் சம்பத், கலையரசு, கனடா நாட்டு பிரதிநிதி பில்டிரிட், நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, மேலாளர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: