சென்னை, ஆக.2-

செல்போன் கோபுரத்தில் ஏறி மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய சசிபெருமாள் உயிரிழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து இளைஞர்கள் சிலர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள செல்போன் கோபுரங்களை கண்காணிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து போலீசார் தங்களது பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் விபரங்களை செல்போன் நிறுவனத்திடம் இருந்து கேட்டு பெற்றுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணி நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: