சென்னை, ஆக.2-

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று முதலமைச்சருக்கு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்
த. வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியி ருப்பதாவது:-

உள்நோக்கம் ஏதுமின்றி கட்சி, அரசியல் கலப்புமின்றி மக்கள் நல்வாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு சாத்வீக வழியில் மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் போராட்டக் களத்திலேயே மரணம் அடைந்திருப்பது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு.

இந்த இக்கட்டான நிலையில் காந்தியவாதி சசிபெருமாளின் உயிர் தியாகத்திற்குரிய மரியாதையை தமிழக அரசு கொடுக்க வேண்டும். மக்கள் நலனுக்காக தன் உயிரையே காணிக்கையாக்கி இருக்கிற சசிபெருமாளின் தியாகத்தை மதித்து தமிழகம் எங்கும் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் மார்க்கெட் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறோம். 100 மீட்டர் கட்டுப்பாடு என்பதை 500 மீட்டராக அதிகரித்து அதற்கான அரசாணை வெளியிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: