ராயபுரம், ஆக 2–

தண்டையார்பேட்டை, கோதண்டராமன் தெருவில் உள்ள சாலையோர பிளாட்பாரத்தில் இரவு 9 மணியளவில் பச்சிளம் ஆண் குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. குழந்தை அருகில் யாரும் இல்லை. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் தண்டயார் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் பாபுராஜேந்திரபோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து  குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை பிறந்து 3 நாட்களே இருக்கும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது. பெற்றோர் யார் என்று தெரியவில்லை.

கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசிசென்றார்களா? அல்லது மருத்துவமனையில்  இருந்து குழந்தை கடத்தி வரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிளாட்பாரத்தில் பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply