வேலூர், ஆக.2–-

ஆற்காடு நீதிமன்ற நீதிபதி தனசேகரன்(43). இவர் தனது குடும்பத்துடன் கஸ்பா பகுதியில் கலவை சாலையிலுள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று பணி முடித்து விட்டு தனசேகரன் வீடு திரும்பினார். அவரது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.நள்ளிரவு வீட்டின் முன்பு இருந்து புகை மூட்டம் வந்துள்ளது. இதை கண்ட தனசேகரனும், அவரது மனைவியும் வெளியே வந்து பார்த்ததனர். அப்போது கார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பிறகு அங்கம்பக்கத்தினர் காரில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

அப்போது காரின் அருகில் கிடந்த ஒரு கேனில் மண்எண்ணெய் நிரப்பப்பட்டு வீசப்பட்டு இருந்தது. அதன் அருகில் தீப்பெட்டி கிடந்தது. இதன் மூலம் யாரோ மர்ம நபர்கள் சிலர், காரை தீ வைத்து எரித்து சென்றது தெரியவந்தது.

இந்த விபத்து பற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி. மதிவாணன் மற்றும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மர்ம நபர்கள் பயன்படுத்திய மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை கைப்பற்றினர்.

நீதிபதி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: