சென்னை, ஆக 2-

நதிகளை இணைக்க கோரியும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவலியுறுத்தியும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டியும் தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 250 பேர் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் புது தில்லி சென்று ஜூலை 29 அன்று ஜந்தர் மந்தர் பகுதியில் மறியல் செய்தனர். பிறகு, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகனை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அடுத்த நாள், மத்திய அமைச்சர் உமாபாரதி வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சங்க பிரதிநிதிகறை உமாபாரதியை சந்தித்தனர். ஜூலை 31 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர். பின்னர், பிரதமர் மோடி இல்லம் முன்பு இருந்த மரங்களில் தூக்கு கயிறுகளை மாட்டி தூக்கில் தொங்கும் போராட்டத்தை நடத்தினர்.

ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. காவல் துறையை கொண்டு விரட்டி அடிப்பதில் தான் அதிக அக்கரைகாட்டியது. தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளையும் சங்கத் தலைவர்களையும் தில்லியில் தங்கவிடாமல் ரயில் மூலம் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனல், ஆத்திர மடைந்த விவசாயிகள் சென்னை திரும்பியதும் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த தமிழக காவல் துறையினர் விவசாயிகளை சமாதானப்படுத்தினர். அப்போது, விவசாயிகள் பாதிப்பு பற்றிய அறிக்கையை மத்திய அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும் என்று முழுக்கமிட்டனர்.

சென்டரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் செய்த விவசாயிகளை பேருந்துகளில் ஏற்றி காவல் துறையினர். சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: