சென்னை, ஆக.2-

மறைமலைநகர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மேஜிக்வுட் நிறுவனம் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும், பொய் புகார் சுமத்தி பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கை பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆலை முன்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சேஷாத்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.