தருமபுரி, ஆக. 2-

தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு டிரெய்னேஜ் போர்டு (குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம்) சிஐடியு சங்க ஆண்டு பேரவை மாவட்டத் தலைவர் எம்.விஜயன் தலைமையில் தருமபுரியில் நடைபெற்றது.

வி.கே. விட்டல் தாஸ் வரவேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.அர்த்தனாரி துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் என்.சண்முகம் வேலை அறிக்கையை சமர்பித்தார். மத்திய அமைப்பின் மாநில உதவி செயலாளர் அய்யப்பன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஆறுமுகம், செயலாளர் சி.நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சரவணன் நன்றி கூறினார்.

நிர்வாகிகள்:மாவட்டத் தலைவராக எம்.விஜயன், செயலாளராக என்.சண்முகம், பொருளாளராக சுப்பிரமணியும் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களில் நீதிமன்ற உத்தரவுபடி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம்; 8 மணி நேர வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: