அரூர், ஆக. 2 –

அரூர் வட்டம் வேப்பநத்தம் கிராமத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுமான பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு துவக்கிவைத்தார்.

அரூர் ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி, வேப்பநத்தம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் (2015-16) இருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணியினை அரூர் எம்எல்ஏ பி.டில்லிபாபு தொடக்கி வைத்தார்.

இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மோ.ஆனந்தன், ஊராட்சித் தலைவர்கள் கல்பனா ரவீந்திரன் (வடுகப்பட்டி), வசந்தா தங்கராசு (மருதிப்பட்டி), மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.குமார், வட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலர் எ.பி.சின்னராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: