சென்னை, ஆக.2-

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு இம்மாதம் 12 ம் தேதி துவங்குகிறது. இதன் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

2015-16 கல்வி ஆண்டுக்கான பொது பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற 7-ந்தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 12-ந்தேதி நடைபெறுகிது.

அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 14-ந்தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 16-ந்தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 18-ந்தேதியும் நடைபெறும்.

அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 22-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 23-ந்தேதியும், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 24-ந் தேதியும் நடைபெற உள்ளது. முதுகலை ஆசிரியர்கள் 55 பேர் நேரடி நியமனம் 24-ந்தேதி நடக்கிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 12-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 16-ந்தேதியும் நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கான கலந்தாய்வு 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply